Jun 30, 2014

 ரமழான் 

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் : 
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184 

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி 

Jun 15, 2014

விண்டோஸ் 8.1 இயங்குதளத்துடன் வெளிவரும் Nokia Lumia 1520


கணினிகளுக்கு புதிய இயங்குதளத்தினை வெளியிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிறகு ஸ்மார்ட் போன்களிலும் புதிய இயங்குதளமான 8.1 அறிமுகம் செய்திருந்தது.
Nokia Lumia 1520 ஸ்மார்ட்போனில் இப்புதிய இயங்குதளம் செயல்படகிறது. இது ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களில் வெளிவரவுள்ளது. Nokia Lumia 1520 Smartphone Specifications பார்க்கலாம். 

Mar 6, 2014

Windows 8.1 இயங்குதளத்தினை இலவசமாக வழங்கும் மைக்ரோசொப்ட்



மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய பயனர் இடைமுகமாக மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்திய Windows 8 இயங்குதளத்தின் பிந்திய பதிப்பே Windows 8.1 ஆகும்.
இந்த பதிப்பினை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அண்ணளவாக 250 டொலர்கள் செலவு செய்ய வேண்டும். 

எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பயனர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கும் பொருட்டு மற்றுமொரு Windows 8.1 இயங்குதளத்தினை வடிவமைத்து வருவதாக உத்தியேகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Free Windows 8.1 Operating System Under Development By Microsoft?
Sources close to Microsoft have reported this week that the company is currently developing and experimenting with a new free version of its Windows 8.1 operating system.
It’s thought that Microsoft is building its new free Windows 8.1 operating system to be tied to its Bing search engine as well as other key Microsoft applications and services.
In the past ,versions of the experimental Windows 8.1 operating system incorporating Bing have been leaked revealing hints of its development. Which is thought to be aiming to bring a low-cost version of Windows to consumers, offering a low-cost upgrade for Windows 7 users, as well as being bundled with PC systems as part of a recent licence cuts for devices under $250.
At the current time Microsoft has not confirmed or denied the development of the low-cost Windows 8.1 operating system and it’s also thought to be considering low cost or free versions of its Windows phone operating system to monetise its Bing search engine platform even further.
More details of a low-cost Windows 8.1 operating system as well as the merging of Windows RT and Windows Phone are expected to be made available by Microsoft during their Build conference later this year.

viyapu.com

Jul 30, 2012

யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால்?



 
    மனித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.
    அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். இது போன்ற சில சம்பவங்களை நம் அறிவிற்கு விளங்குமளவு அறிவியல் ஆதாரங்களோடு அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறான்.
    ஒரு வரலாற்று சம்பவத்தை அல்குர்ஆனில் பார்ப்போம். அல்லாஹ்வின் நல்லடியார் துல்கர்னைன் பயணம் செய்கிறார். முதலில் சூரியன் மறையும் மேற்கு திசைக்கும் பின்பு சூரியன் உதயமாகும் கிழக்கு திசை பக்கம் செல்கிறார்.
    (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார். சூாியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்தபோது, அது ஒரு சேறு கலந்த நீாில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ”துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்”" என்று நாம் கூறினோம்.
    (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; ”எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
    பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓாிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்ைைல. அவர்கள் ”துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜும், மஃஜுஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

Jun 24, 2012

பல புதிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘சின்க் டேப்லெட்

சின்க் நிறுவனம் சமீபத்தில் ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய புதிய குறைந்த விலை டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டுக்கு சின்க் ஸட்-990 ப்ளஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய டேப்லெட் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த சின்க் ஸட் 990ன் மேம்பட்ட புதிய சாதனம் ஆகும்.

இந்த ஸட்-990 ப்ளஸ் டேப்லெட் 1.5 ஜிஹெர்ட் ப்ராசஸர் மற்றும் மாலி 400 ஜிபியு ஆகியவற்றுடன் வருவதால் இது மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இதன் இயங்கும் வேகமும் மிக அதிகமாக இருக்கும்.

இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சம் கொண்ட டேப்லெட் ஆகும். அதற்காக இந்த டேப்லெட் ஒரு மாத இலவச பிக்பிலிக்ஸ் அப்ளிகேசன் வசதியை வழங்குகிறது. இதில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் நாடகங்கள் ஆகியவை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். இந்த புதிய அப்ளிகேசனில் முதல் ஒரு மாதம் ரசிகர்கள் மேற்சொன்னவற்றை இலவசமாக கண்டு களிக்கலாம்.

மேலும் சின்க் ஆன்லைன் கேமிங் நிறுவனமான இபிபோவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதால் 40 வகையான புதிய விளையாட்டுகளை இந்த டேப்லெட்டில் களமிறக்குகிறது. ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட் வைபை, யுஎஸ்பி போர்ட், மைக்ரோ யுஎஸ்பி மறறும் எச்டிஎம்ஐ போன்ற இணைப்பு வசதிகளுடன் வருகிறது.

இந்த சின்க் ஸட்990 ப்ளஸ் டேப்லெடின் விலை ரூ.6,490 ஆகும். இந்த டேப்லெட்டை அன்லைன் மூலம் வாங்கலாம். இந்த புதிய டேப்லெட் இந்திய ரசிகர்களைக் கவருமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
http://www.newyarl.lk

Feb 3, 2012

பிறப்பு மற்றும் நபித்துவத்துக்கு முந்திய நாற்பது ஆண்டுகள்

                                                அஸ்ஸலாமு அலைக்கும்

பிறப்பு

அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் மக்காவில் பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் ‘அனூ ஷேர்வான்’ என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு. இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

(நபி (ஸல்) அவர்கள் பிறந்தபோது அவர்களது நுபுவ்வத்துக்கு முன்னோடியாக ஆமினாவின் உடலிலிருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது அதன் பிரகாசத்தில் ஷாமின் கோட்டைகள் ஒளிர்ந்தன நபி (ஸல்) அவர்கள் கத்னா செய்யப்பட்ட நிலையிலேயே பிறந்தார்கள்; கிஸ்ரா உடைய மாளிகையில் பதிநான்கு மாடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன பல்லாண்டு காலமாக மஜூஸிகள் வணங்கி வந்த பிரம்மாண்டமான நெருப்புக் குண்டம் அணைந்துவிட்டது ‘ஸாவா’ என்ற நீர் தடாகத்தைச் சுற்றியுள்ள கிருஸ்துவ ஆலயங்கள் இடிந்து வீழ்ந்தன என்று கூறப்படும் இத்தகைய கூற்றுகளுக்கு உறுதியான சான்றுகள் ஏதும் இல்லை. அந்த சமுதாயத்தவரும் தங்களது வரலாற்று நிகழ்வுகளில் இதைப்பற்றி குறிப்பிடவில்லை.)

குழந்தையைப் பெற்றெடுத்ததும் ஆமினா அந்த நற்செய்தியை அப்துல் முத்தலிபுக்குத் தெரிவித்தார். அவர் மகிழ்ச்சியுடன் தனது பேரரை கஅபாவுக்கு தூக்கிச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அவருக்காக பிரார்த்தித்தார். மேலும் அக்குழந்தைக்கு “முஹம்மது” எனப் பெயரிட்டார். இப்பெயர் எவருக்கும் இதற்கு முன் சூட்டப்படவில்லை. அரபியர்களின் வழக்கப்படி ஏழாம் நாள் நபி (ஸல்) அவர்களுக்கு கத்னா செய்யப்பட்டது. (தல்கீஹ், இப்னு ஹிஷாம்)

Oct 16, 2011

ரியல் பிளேயர் 14.0.3.647 இறுதி Mediafire


ரியல் பிளேயர் 14.0.3.647 இறுதி | 24,63 எம்பி
ரியல் பிளேயர் Reals புரட்சிகர புதிய ஹார்மனி தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கிறது முதல் தயாரிப்பு உள்ளது. ரியல் பிளேயர் Reals புரட்சிகர புதிய ஹார்மனி தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கிறது முதல் தயாரிப்பு உள்ளது. ரியல் பிளேயர் ஆப்பிள் ஐபாட் உட்பட 100 க்கும் மேற்பட்ட சிறிய சாதனங்கள், அன்று வகிக்கிறது என்று இசை வாங்க மற்றும் பதிவிறக்க நுகர்வோர் செயல்படுத்துகிறது. ரியல் பிளேயர் ஆப்பிள் ஐபாட் உட்பட 100 க்கும் மேற்பட்ட சிறிய சாதனங்கள், அன்று வகிக்கிறது என்று இசை வாங்க மற்றும் பதிவிறக்க நுகர்வோர் செயல்படுத்துகிறது.ரியல் பிளேயர் நீங்கள் கண்டுபிடித்து, புதிய இசை பதிவிறக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகள் விளையாடி மற்றும் மேலாண்மை, மற்றும் நீங்கள் உங்கள் டிஜிட்டல் பொழுதுபோக்கு எடுத்து தேவை மட்டுமே டிஜிட்டல் மீடியா பிளேயர் உள்ளது. ரியல் பிளேயர் நீங்கள் கண்டுபிடித்து, புதிய இசை பதிவிறக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகள்