Oct 30, 2010

நம் பிளாக்கை பேஸ்புக் Networked Blogs பகுதியில் இணைக்க

நம்முடைய பதிவுகளை நாம் இதவரை Fecebookகில் இணைக்க  நாம் தான் ஒவ்வொரு பதிவையும் இணைக்க வேண்டும்.  ஆனால் இனிமேல் அப்படி செய்ய தேவையில்லை நம்முடைய பிளாக்கை Networked blog என்ற புதிய facebook பகுதியில் இணைத்து விட்டால் போதும் நம்முடைய பதிவுகள் தானாகவே நம்முடைய பேஸ்புக்கின் சுவர் பகுதியில் வந்து விடும். இதன் மூலம் நாம் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பிளாக்குகளை இணைத்து கொள்ளலாம்.


  • Networked blogs ஒன்றிற்கும் மேற்ப்பட்ட பிளாக்குகளை இணைத்து விடலாம்.
  • இதில் உங்கள் பிளாக்கினை இணைத்து விட்டால் ஒவ்வொரு பதிவிற்கும் நீங்கள் ஒவ்வொரு முறை பதிவை இணைக்க தேவையில்லை.
  • நீங்கள் பதிவு போட்ட உடனேயே Facebook சுவர் பகுதியில் உங்களுடைய பதிவு இனைந்து விடும்.
  • உங்கள் பதிவில் போட்ட படம் கூட சேர்ந்து வரும் என்பது இதன் தனி சிறப்பு.  
  • இதில் ஓட்டு போடும் வசதியும் உள்ளது.
  • இதில் உங்களுக்கு பிடித்த பிளாக்கை Follow செய்யவும் முடியும்.
Register your blog with Networked bog 
  •  இந்த வசதியை பெற முதலில் நம் பிளாக்கை பேஸ்புக்கின் Networked blog பகுதியில் இணைக்க வேண்டும். 
  • இந்த லிங்கில் Networked Blogs செல்லுங்கள்.  
  • உள்ள Register a blog என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்கள் பிளாக்கின் விவரங்களை கொடுத்து விடவும்
  • நீங்கள் இணைக்க போகும் பிளாக்கின் விவரங்களை கொடுத்து பின்னர் கீழே உள்ள Next பட்டனை அழுத்தவும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும் 

  • இதில் இரண்டாவது வழியை செலக்ட் செய்யவும். உங்களுக்கு கீழே ஒரு கோடிங் வரும் அந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் தளத்தில் Design- Add a Gadget - HtmlJavaScript சென்று பேஸ்ட் செய்யவும்.  Save செய்ததும் திரும்பவும் இந்த பகுதிக்கு வந்து Verify Widget என்பதை கிளிக் செய்யவும். 

  • உங்களுக்கு "Verification Successful" என்ற செய்தி பச்சை நிறத்தில் வரும். இது போல் வந்தால் இதுவரை நீங்கள் செய்தது சரி.
Importing Your Blog 
இப்பொழுது நம் பிளாக்கை இங்கு பதிவேற்ற வேண்டும். இதற்க்கு உங்களுடைய 
விண்டோவில் உள்ள Syndication என்ற பட்டனை கிளிக் செய்யவும். 


  • க்ளிக் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள CHECK BOX கிளிக் செய்யவும். 

 

  • பக்கத்தில் உள்ள Publish a Test Post என்ற பட்டனை கிளிக் செய்யவும்.கீழே உள்ள படத்தில் பார்த்துகொள்ளவும்.


இந்த பட்டனை கிளிக் செய்ததும் ஒரு test post உங்களுடைய Facebookகின் சுவர் பகுதியில் வந்திருக்கும். இனிமேல் நீங்கள் உங்கள் பிளாக்கில் பதிவிட்டால் அது உடனே உங்களுடைய பேஸ்புக் சுவர் பகுதில் வந்திருக்கும்.   

குறிப்பு - இந்த வசதியை பெற நீங்கள் குறைந்தது ஒரு பிளாக்கையாவது Follow செய்யவேண்டும்.  

ஜிமெயிலில் புதிய வசதி - Auto Advance

பொதுவாக நாம் ஜிமெயிலில் ஏதேனும் மெயிலை delete செய்தாலோ அல்லது archive செய்தாலோ நம்முடைய விண்டோ திரும்பவும் முகப்பு பக்கத்துக்கே(inbox) சென்று விடும் நாம் திரும்பவும் மெயிலை க்ளிக் செய்து தான் நாம் அடுத்த மெயிலை delete மற்றும் archive செய்ய முடியும். இனி அது போல் செல்ல வேண்டியதில்லை நாம் ஒரு மெயிலை delete செய்தால் நம் விண்டோ இன்பாக்ஸ்க்கு செல்லாமல் அட்டோமேடிக்காக அடுத்த மெயில் ஓபன் ஆகியிருக்கும்.
இந்த வசதி ஏற்கனவே யாகூவில் உள்ளது. இப்பொழுது ஜிமெயிலிலும் இந்த வசதியை புகுத்தி உள்ளனர்.
  • இந்த வசதியை பெற முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • Settings - Labs - Auto advance என்ற வசதியில் உள்ள enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்து விடுங்கள்.
  • திரும்பவும் Settings சென்று General பகுதியில் இருக்கும் auto advance வசதியை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொண்டு கீழே உள்ள Save Changes பட்டனை அழுத்தி நீங்கள் மாற்றியதை சேமித்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது ஏதேனும் மெயிலை அழித்தோ அல்லது அர்ச்சிவ் செய்தோ பாருங்கள் உங்களுக்கு நீங்கள் செய்த மாற்றம் தெரியும்.

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்

நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.

10. DOWNLOAD 3000 - RANK 4201
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/

9. SOFT32- RANK 3909
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/

8. DOWNLOAD ATOZ- RANK 2508
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/

7. DL 4 ALL-   RANK 1404
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.

6. FREE DOWNLOAD CENTER- RANK 1256
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/

5. ZDNET - RANK 1224
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE  போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/

4. FILE HIPPO -  RANK 688
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது.  இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/

3. SOFTPEDIA -  RANK 348
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/

2. BROTHER SOFT -  RANK 300
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.brothersoft.com/

1. CNET  -  RANK 159 
முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com

இந்த பட்டியலை நான் அலெக்ஸா ரேங்க் வைத்து வரிசை படுத்தி உள்ளேன். ஏதேனும் தளத்தை விட்டு இருந்தால் தெரிவிக்கவும்.

பென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென்ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி   உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன்.
1. USB WRITE PROTECTOR :
 இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த 
பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது.


2. USB FIREWALL :
  பென்ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும்  வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது இந்த இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது. 


3. PANDA USB VACCINATION TOOL :
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

4. USB GUARDIAN :
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.


மேலே கூறிய நான்கு மென்பொருட்களும் உங்கள் பென்ட்ரைவை பாதுகாக்க உதவுகின்றன. தரவிறக்கி கொள்ளுங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க

எழுதும் அனைவரும் தங்கள் பிளாக்கர் பிரபலமாகவேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் பிளாக்கர் பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு   பணத்தையும் சம்பாதிக்க வழி உள்ளது. இங்கு கீழே  பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+  இணையதளங்கள் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். தாங்கள் அந்த தாங்கள் இந்த தளங்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவும் வழி உள்ளது. 
Advertising Programs


Selling Text Link Ads




In-Text Advertising Programs



RSS Feed Ads




Pop-ups and Pop-unders



Selling Direct Ads




 இந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பிளாக்கினை சேர்த்து அக்கௌன்ட் ஓபன் சிது கொண்டு உங்கள் மாத வருமானத்தை பெருக்கி கொள்வோம்.

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேக மாக தரவிறக்க

 நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. 
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
பயன்கள்:   
  •  உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது. 
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
  • வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
  • வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)
  • வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.
  • இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.
பயன் படுத்தும் முறை:
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
  • இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்
  •  
  • இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
  • அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
  • அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து  கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.


அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து
  •  

Oct 28, 2010

காணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங்களும்..

 நாம் பலநேரங்களில் இணையத்தில் காணும் காணொளிகளை கணினியில் சேமிக்க நினைப்போம் , ஆனால் பல தளங்களில் காணும் வசதி மாத்திரம் இருக்கும்.தரவிறக்குவதற்கான சுட்டியோ, வசதியோ தரப்பட்டிருக்காது. அந்த குறையினை ANT.Com  என்ற தளம் தனது காணொளி தரவிரக்கப்பட்டை மற்றும் நீட்சி என்பவற்றின் மூலம் நீக்குகின்றது. நாங்கள் செய்ய வேண்டியது நெருப்புநரி உலாவியை உபயோகிப்பவர்களாயின் நெருப்பு நரி உலாவிக்கான ANT காணொளி தரவிறக்க நீட்சியை நிறுவுதலும், Explore...

Oct 27, 2010

http://tamilpctraining.blogspot.com/

<a href="http://tamilpctraining.blogspot.com/" target="_blank"><img align="left" src="https://sites.google.com/site/tctips/khantp11.jpg" height="100" with="150" /></a>

பயர் பொக்ஸில் தேடல் முடிவுகளில் புதிய வசதி - Fire Fox search Preview

  தற்போது கூகுள் தனது Image Search மேம்படுத்தியுள்ளது. இது Bing Search அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.  நாம் இப்போது பார்க்கப் போவது SearchPreview . நாம் Google,Yahoo,Bing போன்றவற்றில் தேடுகின்றோம்.  தேடல் முடிவுகள் Text ஆக மட்டுமே காட்டப்படும். அதனோடு சேர்த்து அருகில் அந்தந்த தளங்களின் Screen Shot வந்தால். இனைய உலா இன்னும் இலகுவாகிவிடும். இந்தவேலையை பயர்பொக்ஸின் இந்த ( SearchPreview 4.6)  Add On செய்து தருகின்றது.
. இது Google,Yahoo,Bing போன்றவற்றில் பாவிக்க முடியும். இது  Firefox Recommended  செய்யப்பட்டதாகும். இதன் முலம் தடைசெய்யப்பட்ட தளங்களை இலகுவாக இனங்கான முடியும்
இதனை பதிவிறக்க இங்கே செல்லவும்
Free Download -  Search Preview

இதனை கூகுளும் வழங்குகின்றது. இதனைப்பெற நீங்கள் Search செய்து முடிவுகள் வந்தவுடன் இடதுபக்கம் Page Preview என்பதைக் Click செய்தால் தளங்களின் Screen Shot பார்க்க முடியும்.

ஜீமெயிலில் அழகாக வைக்க Themes Gmail


நாம் தினமும் பாவிக்கும் ஜீமெயிலை அழகான தீம்கள் போட்டு வைத்திருக்கின்றோம் ஆனால் இது சிலருக்கு தெரியாது.ஜீமெயில் பக்கம் மிக விரைவாக Download ஆகுவதற்காக வெள்ளை நிறப் பிண்னனியே  Default  ஆக அமைக்கப்பட்டிருக்கும்.    உங்களின் ஜீமெயில் பக்கத்தில் வலது  மேல்மூளையிலே Setting இருக்கும் அதனை அளுத்துங்கள். பின் Themes என்ற Tabe பை அளுத்த புதிய Themes கள் காட்டப்படும் அவற்றில் ஒன்றை தெரிவுசெய்துகொள்ளுங்கள்.
           பல ஜீமெயில் Account  வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு Account க்கும் ஒவ்வொரு Themes பாவித்தால் இலகுவாக கண்டுபிடிக்கலாம்.


3D Wallpaper

நீங்கள் 3D Wallpaper பாவித்து  இருப்பீர்கள். ஆனால் இதுபோன்ற Graphic 3D Wallpaper களைக் பயன்படுத்திப் பாருங்கள். இவை 3D யை உணர்வதற்காகவே வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த 3D Desktop Wallpaper களை Active செய்துவிட்டு Desktop பை உற்று நோக்கிப் பாருங்கள். உண்மையான 3D Effect விளங்கும்.