Jan 7, 2011

ஆதம் அலைஹி வஸ்ஸலாம்


மக்காவிலிருந்து சிறிது தூரத்திலுள்ள அராஃபாவிலே ஜபலூர்ரஹ்மத் என்ற இந்த மலையில்தான் (படம் 1a ) ஆதம் அலைஹிவஸ்ஸலாமும் ஹவ்வா அலைஹிமுஸ்ஸலாமும் இவ்வுலகில் முதன் முறையாக சந்த்தித்து கொண்டார்கள் என்பது கருத்தாகும்.
Prophet Adam and Hawwa first meeting place.
படம் 1a
நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

Jan 3, 2011

Yahoo Mail இல் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைத் தடை செய்வது எப்படி?


Block emails in yahoomailவிளம்பரங்கள் மற்றும் குப்பை மின்னஞ்சல்கள் மற்றும் தொந்தரவு செய்யும் நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களால் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? இவற்றை நிறுத்துவதற்கு சிலர் பாடுபடுவர். ஆனால் நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையிலேயே இத்தகைய வசதிகள் உள்ளன. ஜிமெயிலைப் போலவே யாகூ மெயில் (Yahoo mail) பயன்படுத்துபவர்களும் வேண்டாத / குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தடை செய்யலாம்.


யாகூ
மெயிலில் 500 மின்னஞ்சல் முகவரிகள் வரை சேர்க்கலாம். ஒரு முறை சேர்த்துவிட்டால் போதும், அவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் நீங்கள் படிப்பதற்கு முன்பாக எல்லாம் தானாகவே அழிந்து விடும்.

Blocked senders எனப்படும் வரிசையில் தேவையில்லாத மின்னஞ்சல் முக்வரிகளை சேர்த்து விடலாம். விருப்பமில்லாத மின்னஞ்சல்களைப் பெற்று பின்னர் ஒவ்வொன்றாக அழிப்பதற்கு யாகூ மெயிலே அழித்துவிடும்.எப்படி என்று பார்ப்போம்.

1.உங்கள் Yahoo மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் ஒரத்தில் உள்ள Options -> More options… செல்லவும்.

Block emails in yahoomail