இம் மென்பொருளை தரவிறக்க...
எப்படி நகரல்களை உருவாக்குவது..?
மென்பொருளை நிறுவியபின் நகரலாக மாற்றவேண்டிய படத்தினை மென்பொருளில் திறக்கவும்.
படம் 1
பின் தெரிவு கருவியை பயன்படுத்தி நாம் கொடுக்கும் விளைவு வரவேண்டிய பகுதியை தெரிவு செய்து(நான் முழு படத்தையும் தெரிவு செய்துள்ளேன்) வலது சொடுக்கு செய்து தெரிவை முடிக்கவும். படம் 2
பின் Rain/Snow and Ripples என்ற கருவியை பயன்படுத்தி விளைவு வகையினை தெரிவு செய்யவும்(படம் 4).படம் 3
படம் 4
பின் நாம் தெரிவுசெய்த விளைவின் அளவு மற்றும் தெரிவுகளை மாற்ற அவ்விளைவிற்கான அமைப்பினை தெரிவுசெய்து விரும்பியவாறு மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
அமைப்பில் ஊடுருவு அளவு(Transparency) என்பதில் ஊடுருவல் அளவை 90 மேல் கொடுக்கவும். இல்லாவிடில் நீர் விளையு சரியாக தெரியாது.
படம் 5
நாம் கொடுத்த விளைவுகளின் முன்னோட்டத்தை பார்க்க Run Animation(படம் 6) என்பதை சொடுக்கி விளைவின் முன்னோட்டத்தை பார்க்கலாம்.படம் 6
முன்னோட்டம் சரியெனில் .SWF, .GIF,.AVI போன்ற உங்களுக்கு தேவையான வகையில் சேமித்துக்கொள்ளலாம்.படம் 7
No comments:
Post a Comment