Nov 13, 2010

Saudi-Arabia Live TV Channel 1 - Channel one, Arab and Muslim programs and Saudi Travel

Saudi-Arabia Live TV Channel 1 - Channel one, Arab and Muslim programs and Saudi Travel: "- Sent using Google Toolbar"

Nov 12, 2010

விசுவல் பேசிக்கில் அசத்தலான புதிய Grid கண்ட்ரோல் உருவாக்க...


விசுவல் பேசிக் ஒரு அருமையான நிரலாக்க மொழி. எளிதான முறையில் பலவித சாப்ட்வேர்களை இதில் உருவாக்கலாம். நிரலாளர்களின் விருப்பமாக இருக்கும் இதில் அவ்வளவாக அசத்தலான தோற்றத்தை உருவாக்க கண்ட்ரோல்கள் இல்லை.இப்போது vb.net வந்ததும் சிலர் அதற்கு மாறிவிட்டார்கள்.

ஆனால் விசுவல் பேசிக்கிலேயே ஒருசில கண்ட்ரோல்களை இணைப்பதன் மூலம் நாம் உருவாக்கும் சாப்ட்வேரை மேலும் பயனுள்ளதாகவும் அழகாகவும் மாற்றலாம். இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு Grid கட்டுப்பாடு ஆகும். இது ஒரு ActiveX கண்ட்ரோல். இது ஏற்கனவே விபியில் உள்ள MsFlexgrid மற்றும் Listview இரண்டும் சேர்ந்த கலவை போல காட்சியளிக்கும். இதில் நாம் காட்சிக்கு வைக்கப்படும் தரவுகள் அழகாக வரிசைப்படுத்தப்படும்.

இந்த LGrid.ocx கோப்பை முதலில் தரவிறக்கவும்.பின்னர் நீங்கள் உங்களுக்கு வேண்டிய புரோஜக்டை திறந்து Project - > Component செல்லவும். திறக்கும் பெட்டியில் Browse செய்து நீங்கள் தரவிறக்கிய கோப்பை தேர்வு செய்து பின் அதில் டிக் செய்யவும்.இப்போது இந்த புதிய கண்ட்ரோல் உங்கள் புரோஜக்டில் இணைக்கப்படும்.

இதற்கான பின்புற வண்ணம், தேர்வு செய்யும் வண்ணம், ஒரு வரிசைக்கான உயரம் போன்றவற்றை நிரலாக கொடுத்துள்ளேன். இந்த கண்ட்ரோலை ஒரு படிவத்தில் இணைத்து வடிவமைக்கும் நேரத்தில் கூட இந்த அமைப்புகளை செய்யலாம். இல்லாவிட்டால் கீழுள்ள கோடிங்கை படிவத்தின் Load நிகழ்வில் அழைத்து இயக்க நேரத்தில் வண்ணம் போன்ற கூறுகளை மாற்றிக்கொள்ளலாம்.

Private Sub Form_Load()
Call setDesign
End sub

Private Sub setDesign()

With LGrid1
.AllowUserResizing = 4
.BackColor = &H80000005
.BackColorBkg = &HF4FFFF
.BackColorEdit = &HC0FFFF
.BackColorFixed = &H8000000F
.BackColorSel = &H80C0FF
.FocusRectColor = &H80FF&
.GridColor = &HA9EEFF
.SBackColor1 = &HF4FFFF
.SBackColor2 = &HE3F9FB
.Striped = True
.RowHeightMin = 20
End With
End Sub


அடுத்து ஒரு தரவுத்தளத்தில் (Database) உள்ள ஒரு குறிப்பிட்ட அட்டவணையின் தகவல்களை எப்படி இந்த கண்ட்ரோலில் வரிசைப்படுத்துவது என்று பார்ப்போம். கீழ் உள்ள கோடிங்கை உங்கள் தரவுத்தளத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டு எதாவது ஒரு கட்டுப்பாட்டின் கிளிக் நிகழ்வில் இந்த நிரலை சேர்த்துவிடவும்.

Private sub cmdShow_Click()

Dim I as long
Dim rs as New Adodb.Recordset
Rs.open “Select *from students”, Con, adOpenDynamic, adLockOptimistic

With LGrid1
.Redraw = False
.AddColumn "Name", 100
.AddColumn "Age", 200
.AddColumn "Class", 100
.Redraw = True
.Refresh
End with
LGrid1.Redraw = False
LGrid1.Clear

If Rs.Recordcount> 0 then
Rs.MoveFirst
Do while not Rs.EOF
I = LGrid1.AddItem(rs.Fields("Name"))
LGrid1.CellText(I, 1) = rs.Fields("Age")
LGrid1.CellText(I,2) = rs.Fields(“Class”)
Rs.MoveNext
Loop
End if

LGrid1.Redraw = True
LGrid1.Refresh

Rs.close
Set Rs = Nothing

End Sub
இதில் AddColumn என்ற பண்பு நெடுவரிசைத்தலைப்புகளை ( Column Header) அமைக்கிறது.அதோடு அதன் அளவையும் அருகில் கொடுத்துவிடலாம். CellText(I,1) என்பது குறிப்பிட்ட வரிசை மற்றும் நெடுவரிசையில் எந்த தகவல் அமையவேண்டும் என குறிக்கிறது.

எல்லாவற்றையும் முடித்துவிட்டு F5 கொடுத்து இயக்குங்கள். இப்போது Grid கண்ட்ரோல் முதல் வரிசை ஒரு வண்ணத்திலும் அடுத்த வரிசை வேறு வண்ணத்திலும் தொடர்ச்சியாக மாறி மாறி வரும். தேர்வு செய்யும் போது மற்றொரு வண்ணத்தில் தகவல்களை அழகாக காட்டும். நன்றி!

Tags : Linux Grid Control in vb6, vb6, ActivexControl, ocx files,ocx, Linux grid ocx , vb6 components, vb6 reference, Add an Activexcontrol in vb6, using Activexcontrols in vb6, Activex control programming in vb6, vb6 in tamil, tamil vb6

கணினியில் தேவையில்லாத குப்பைகளை அழிக்க

கணிப்பொறி பயன்படுத்துவதில் அவ்வப்போது தேவையில்லாமல் நாம் பயன்படுத்தாத பைல்களும் சேர்ந்து நமது ஹார்ட் டிஸ்கின் இடத்தை அடைத்துக்கொள்ளும். Temp files, backup files, recent files போன்றவை நமக்கு தெரியாமலே கணினியால் நாம் ஒரு வேலையை செய்யும் போது உருவாக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் நாம் தேடிக்கண்டுபிடித்து நீக்குவது எளிதான விசயமல்ல. இவற்றையெல்லாம் நீக்கினால் கணினியின் ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சமாகும். வேறு செயல்களுக்கும் வேகம் கிடைக்கும்.
இதற்காக இந்த குப்பைகளை நீக்க இலவச மென்பொருள் Moo0 Diskcleaner உள்ளது. இதனால் எளிதாக கணினியை சுத்தமாக்கலாம்.ஒரு கிளிக்கில் எல்லாவற்றையும் கணினியிலிருந்து நீக்கிவிடலாம். இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.

இந்த மென்பொருள் மூலம் கீழ்க்கண்டவற்றை நீக்கலாம்.
Recycle bin
temp files
backup files
IE cache
Recent files
cookies
Firefox cache and history
windows log files

தரவிறக்கச்சுட்டி: Download Moo0 DiskCleaner

Nov 6, 2010

மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாகப் பெற

இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது  கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில் நமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions) இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி நம் கம்ப்யூட்டர்யில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.com/ இதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும்   கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் டைப் செய்து என்ட்டர் கொடுக்கவும் . இப்பொழுது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது கொடுக்கவும்

Nov 4, 2010

SUPER WHY! | Super Why's The Power to Read Music Video | PBS KIDS

SUPER WHY! | Show Opening | Theme Song | PBS KIDS

SUPER WHY! | Its Time to Transform! | PBS KIDS

Windows 7 Desktop | Widgets - Gadgets - Part 2

Windows 7 Desktop | Widgets - Gadgets - Part 2

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை


  • கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

  • நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.

  • ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய Justify Fullஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

  • இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

  • வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.

  • ""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

  • இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

  • லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

  • கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

  • இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
  • தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
  • செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

  • நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

  • கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

  • கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.














  • கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

  • கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

  • கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

  • கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

  • கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

  • கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;

  • கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.
லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.

  • பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.

  • பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

  • கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

  • உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

  • ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.

  • இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

  • மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

  • எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.

  • அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.

  • ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.

  • இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.

  • சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

  • ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.
  • கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!

Nov 3, 2010

இன்று ஒரு சில புகைப்படங்கள்













“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி
  • - உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது. இக்குர்ஆன் தனிமனித, குடும்ப, சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும், பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.
ஆன்மீகத்தை (இபாதத்களை) மட்டும் சொல்லித் தராமல் கொடுக்கல்-வாங்கல் (கடன்) அடைமானம், வட்டி, வியாபரம்,
குழந்தைக்கு பாலூட்டல், குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்வு, குடும்பப் பிரச்சினைக ளைத் தீர்த்து வைத்தல், தலாக், ஜீவனாம் சம் (மஹர்) பெண்ணுரிமை
பெற்றோரை பேணுதல், குடும்ப உறவை அண்டுதல், அடுத்த வீட்டாரை மதித்தல், பிற மக்களுடன் பரஸ்பரம் அன்பை பரிமாறுதல், நல்லிணக்கத்துடன் நடத்தல்,
வீட்டுக்குள் செல்லும் ஒழுங்குகள், நம்பிக்கை நாணயம் பேணல், வாரிசுரிமை, சொத்துப் பங்கீட்டு , ஒழுக்க மேம்பாட்டும் அதனை சீர் குலைக்கும் காரணிகளும்,
சமூக சீர்கேடுகள், சமுதாய கொடுமைகள், குற்றவியல் சட்டங்கள், பொருளாதாரம், அரசியல், அனாதைகள் பராமரிப்பு, கல்வி, லௌகீக விடயங்கள் என்று அன்றாட வாழ்வுக்கான அனைத்து விடயங்களையும் அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வை நம்பிய மனிதன் (முஸ்லிம்) அந்தக் குர்ஆனையும் நம்ப வேண்டும். குர் ஆனை இறைவேதமாக நம்பியவன் அந்தக் குர்ஆனை தினம்தோறும் ஓதுவதுடன் அதன் விளக்கங்களையும் படித்துப் பின்பற்ற வேண்டும். இதற்காகவே அல்குர்ஆன் அருளப்பட்டது.
அல்லாஹ் அருளிய இந்த வேதம் படிப்பதற்கும் விளங்குவதற்கும் இலகுவானது. கருத்து முரண்பாடற்றது. நடைமுறைக்கு ஏற்றமானது. அதனாலேயே மிகத் தெளிவான வேதமாக உள்ளது, இதனாலேயே இக்குர்ஆனை படித்து சிந்தித்துணர மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான்.
“உங்களிடம் ஒரு வேதத்தை அருளி னோம். அதில் உங்களுக்கு ‘அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா? (21:10).
இது பாக்கியம் நிறைந்த வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் (நபியே) உமக்கு அருளினோம். (38:29)
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24).
“அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” (4:84).
வாழ்கின்ற வாழ்வு அமைதியானதாக நிம்மதியானதாக இருக்க வேண்டுமானால் அந்த வாழ்வுக்கு பரகத் பொருந்திய அல்லாஹ்வுடைய வேதமான அல்குர்ஆன் வழிகாட்டுகிறது.
பாக்கியம் (பரகத்) நிறைந்த வேத நூலை இறக்கி வைத்த அல்லாஹ், அதில் அறிவுரைகள் வழிகாட்டல்கள் உண்டு என உறுதியாகக் கூறுகிறான். அதனைப் பார்த்து பின்பற்ற வேண்டும் என்றும் கட்டளையிடுகிறான்.
எவர் குர்ஆனை படிக்காமல் விளங்காமல் சிந்திக்காமல் அதனை விட்டு விலகி நடக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் அருள் இருக்காது. பூட்டுக்களால் மூடப்பட்ட இருண்ட அறையாகவே அது இருக்கும்.
இன்று குர்ஆன் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. பல தப்ஸீர் நூல்ளை வைத்துத்தான் இலகுவான நடையில் மார்க்க அறிஞர்கள் குர்ஆனை மொழி பெயர்த்துள்ளார்கள். படித்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களைச் சார்ந்தது.
நாளாந்தம் பத்திரிகைகள் படித்து விளங்க முடியுமாக இருந்தால் அதைவிட இலகுவாக குர்ஆனை விளங்க முடியும். (விளங்க முடியாது என்றால் உலமாக்களை அணுகி படிக்க வேண்டும்).
பத்திரிகை படிப்பதற்கு, செய்திகள் பார்ப்பதற்கு, நேரம் ஒதுக்குபவர்கள் குர்ஆனை படிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களாவது ஒதுக்கக் கூடாதா?
குர்ஆனின் போதனைகளை விட்டு ஓரமாகக் கூடியவர்களின் இம்மை வாழ்வும் மறுமை வாழ்வும் படுமோசமானதாக பயங்கரமானதாக அமையும் என்ற அல்குர்ஆனின் எச்சரிக்கையை எப்போதும் மனதில் வைத்திட வேண்டும்.
எவர் எனது போதனையைப் புறக்கணிக்கிறாரோ அவனுக்கு (இம்மையில்) நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
என் இறைவா! நான் பார்வையுடையவனாக (உலகில்) இருந்தேனே ஏன் என்னை குருடனாக எழுப்பினாய் என்று அவன் (மறுமையில்) கேட்பான்.
அப்படித்தான், நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ (உலகில்) மறந்தவாறே, (வாழ்ந்தாய்) இன்று (நீயும்) மறக்கப்படுவாய் என்று (அல்லாஹ்) கூறுவான். (20: 124-126).
குர்ஆனைப் பார்த்து படிப்பினை பெற்று வாழாமல் புறக்கணித்தவன் மறுமையில் குருடனாக எழுதப்படுவான்; என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரான வழியை அறிவிக்கின்றது. விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்வோருக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறது. (17:9).
மக்களை இக்குர்ஆன் மிக நேரான வழிக்கு இட்டுச் செல்லும் என்று அல்லாஹ் உத்தரவாதமளிக்கிறான். அதனைப் பற்றிப் பிடிக்கும் மக்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.
அல்குர்ஆன் ஓதும் இடங்களுக்கு (வீடுகளுக்கு) அருள் நிறைந்த மலக்குகள் இறங்குகிறார்கள் மற்றும் ஸகீனத் இறங்குகிறது.
ஷைத்தான் அந்த வீட்டிலிருந்து ஓடுகிறான்.
குர்ஆனுடன் தொடர்பாகின்றபோது மனிதனின் செயற்பாடுகள் நன்மையின் பாலும் இறை திருப்தியின் பாலும் சென்றுவிடுகிறது. இம்மை மறுமை வாழ்வு பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது.
எனவே ‘பாக்கியம் (பரகம்) நிறைந்த வேத நூல்’ என்று அல்லாஹ் கூறுவது அந்தக் குர்ஆனை அழகான அச்சில் வடித்து உயர்ந்த துணியில் வைத்து வீடுகளில் கடைகளில் தொங்கவிடுவதற்கோ
மேனியில் கட்டிக் கொள்வதற்கோ
மரணித்தவர்களுக்காக ஒதி பார்சல் பண்ணுவதற்கோ
தாயத்துகளாக தடுகளாக எழுதி வியாபாரம் பண்ணுவதற்கோ அல்ல.
உயிருடன் நடமாடும் மானுட சமூகம் நல்லுணர்ச்சி பெறுவதற்கே!
வாழ்க்கையின் ஒவ்வொரு எட்டிலும் குர்ஆன் பேசப்படக்கூடியதாக அமையும் போதே வாழ்வு பரகத் பொருந்தியதாக ஆகிவிடுகிறது.

இலவச AVG ஆண்டி வைரஸ் 2011

Nov 2, 2010

உங்களுக்கு மெயில் அனுப்பியது யாரு?

உங்களுக்கு மெயில் அனுப்புனது யாரு? எங்கிருந்து அனுப்பினார்னு கண்டு பிடிக்கனுமா?

கீழே இருக்கிற ஸ்டெப்ஸ்-ஐ அப்படியே பண்ணுங்க.

நீங்க ஜி-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல more options ல show original போங்க, (படத்தை பார்க்கவும்)




இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க.. (படத்தை பார்க்கவும்)








நீங்க யாஹூ-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் ஐ ஓப்பன் பண்னுங்க,
அதுல Full Headers (in Bottom of the mail) போங்க, (படத்தை பார்க்கவும்)


இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..







நீங்க லைவ்-மெயில் யூசராக இருந்தால்,

உங்களுக்கு வந்த மெயில் right click ஐ பண்னுங்க,
அதுல view message source ஐ க்ளிக் பண்ணுங்க, (படத்தை பார்க்கவும்)


(வழக்கம் போல) இப்போ உங்களுக்கு புது விண்டோ ஒண்ணு ஓப்பன் ஆகும்,
அதுல அனுப்பினவர் ஐ.பி அட்ரசை நோட் பண்ணுங்க..



இப்போ ஐ.பி-ஐ வைத்து இடத்தையோ டொமைனையோ கண்டுபிடிக்க கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க.



http://remote.12dt.com/lookup.php


http://www.geobytes.com/ipLocator.htm

ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக் ( Official version)

தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப் (Tab)' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.

இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்



மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ்
(Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.

Download Skype 5.0 here

கணினிக்குரிய டிப்ஸ் சில


டவுண்லோட் செய்த பைல் எங்கே?

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து,



போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள். நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.


குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க


வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:– மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fonts தேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.


டாஸ்க் பார் / டூல் பார்

பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.


உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த

கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது. இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.


ஷிப்ட்+எப்5 (shift+f5) என்ன நடக்கும்?

வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று. அது கண்ட்ரோல் + இஸட்(z). இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய்(y) அழுத்தினால் போதும்.

உங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக phone களுக்கு call செய்யலாம்...


இப்பொழுது முற்றிலும் இலவசமாக உங்கள் மொபைலில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம்,

இதற்கு உங்களிடம் 3G வசதி(வீடியோ கால் வசதி) கொண்ட நோக்கியா or iphone மொபைல் இருக்கவேண்டும் (3G நெட்வேர்க் இருக்கவேண்டிய அவசியம் இல்லை),

உங்கள் மொபைலில் GPRS வசதியை activate செய்து அதன் பின்பு உங்கள் மொபைலில் இருந்து http://www.fring.com/ என்ற இணையத்தளத்துக்கு சென்று fring என்ற mobile application ஐ டவுன்லோட் செய்க.பின்பு ஏதாவது voip account ஒன்றை registrar செய்ய வேண்டும். (உதாரணமாக voipcheap , voipwise , smartvoip , jumblo). பின்பு உங்கள் மொபைல் இல் நீங்கள் டவுன்லோட் செய்த fring ஐ open செய்து உங்களுக்கென்று ஒரு account ஐ registrar செய்க. பின்பு முறையே


option-> setting -> configure service -> SIP -> other -> user ID and Password ஐ type செய்து proxy address என்ற இடத்தில் proxy address ஐ type செய்ய வேண்டும் (உதாரணமாக sip.voipcheap.com , sip.voipwise.com , sip.smartvoip.com , sip.jumblo.com ).

பின்பு ok கொடுத்து main மெனுவிற்கு சென்று option -> setting -> show phone contact ஐ select செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் மொபைல் இல் save செய்துள்ள contact number களின் list உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் யாருக்கு call செய்ய வேண்டுமோ அந்த number ஐ select செய்து option -> call -> SIP call ஐ select செய்யுங்கள். உங்களின் மொபைல் இல் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்படுவதை மொபைல் இன் screen இல் காணலாம்.....

NOTE: voip account களில் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.....
voip account பற்றிய மேலதிக விபரங்களுக்கு
click hear--> voipcheap , voipwise , smartvoip , சும்ப்லோ


Nov 1, 2010

How to create a blog with Blogger

உங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்

உங்கள் கணனியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர் கண்காணிப்பு மென்பொருள்.
  • இந்த மென்பொருளை நிறுவியபின்னர் நிறுவிய கணனியின் செயற்பாடுகள் முழுவதும் பதிவு செய்யப்படும். 

  • நாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணனி திரையினை படமாகவும் சேமிக்கும். 
  • வேறு யாரும் பார்க்காதவாறு கடவுசொல் இடும் வசதியும் உள்ளது.
  • குறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கம் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.
                                                         Tools---->Settings Wizard
  •  மென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.
  • பின்னர் மென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl+Shift+Alt+K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழிவிசைக்கட்டளையை மாற்றலாம்)
  • Run கட்டளையில் "runkgb" என வழங்கியும் திறக்கலாம்.இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.
மென்பொருளை நிறுவுவதற்கும் ஆரம்பிப்பதற்கும் உங்கள் கணனியில் நிறுவியுள்ள எதிர்வைரசு காப்பை நிறுத்தவேண்டி ஏற்படலாம்.

இம்மென் பொருளை தரவிறக்க.

செயற்படுத்துவதற்கான செயற்பாட்டு இலக்கங்கள் மென்பொருளுடன் வழக்கம்போல இணைத்துள்ளேன்.

மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய கணனியில் நிறுவி அவர்களின் செயற்பாடுகளை மின்னஞ்சல் மூலம் பார்க்கும், தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறாகவும் இம்மென்பொருள் அமைந்தாலும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் வெட்டியாய் பொழுது கழிப்பவர்களை மேலதிகாரிகளுக்கு போட்டுக்கொடுக்க இவ்வாறான மென்பொருள்கள் உதவுகின்றன.
 உங்களுக்கு தெரியாமல் உங்கள் கணனியிலும் யாரேனும் இவ்வாறான மென்பொருளை நிறுவியிருக்கலாம். எச்சரிக்கையாய் இருங்கள் , மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்க முடியாது.