சின்க் நிறுவனம் சமீபத்தில் ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய புதிய குறைந்த விலை டேப்லெட்டைக் களமிறக்கி இருக்கிறது. இந்த டேப்லெட்டுக்கு சின்க் ஸட்-990 ப்ளஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய டேப்லெட் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த சின்க் ஸட் 990ன் மேம்பட்ட புதிய சாதனம் ஆகும்.
இந்த ஸட்-990 ப்ளஸ் டேப்லெட் 1.5 ஜிஹெர்ட் ப்ராசஸர் மற்றும் மாலி 400 ஜிபியு ஆகியவற்றுடன் வருவதால் இது மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் இதன் இயங்கும் வேகமும் மிக அதிகமாக இருக்கும்.
இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அம்சம் கொண்ட டேப்லெட் ஆகும். அதற்காக இந்த டேப்லெட் ஒரு மாத இலவச பிக்பிலிக்ஸ் அப்ளிகேசன் வசதியை வழங்குகிறது. இதில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் நாடகங்கள் ஆகியவை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும். இந்த புதிய அப்ளிகேசனில் முதல் ஒரு மாதம் ரசிகர்கள் மேற்சொன்னவற்றை இலவசமாக கண்டு களிக்கலாம்.
மேலும் சின்க் ஆன்லைன் கேமிங் நிறுவனமான இபிபோவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதால் 40 வகையான புதிய விளையாட்டுகளை இந்த டேப்லெட்டில் களமிறக்குகிறது. ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் வரும் இந்த டேப்லெட் வைபை, யுஎஸ்பி போர்ட், மைக்ரோ யுஎஸ்பி மறறும் எச்டிஎம்ஐ போன்ற இணைப்பு வசதிகளுடன் வருகிறது.
இந்த சின்க் ஸட்990 ப்ளஸ் டேப்லெடின் விலை ரூ.6,490 ஆகும். இந்த டேப்லெட்டை அன்லைன் மூலம் வாங்கலாம். இந்த புதிய டேப்லெட் இந்திய ரசிகர்களைக் கவருமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
http://www.newyarl.lk
No comments:
Post a Comment