Sep 27, 2011

பர்சனல் போல்டர்களை பாதுகாக்க இலவச மென்பொருள்

நமது பர்சனல் அல்லது முக்கியமான போல்டர்களையும் , கோப்புகளையும் பிறர் தெரிந்தோ தெரியாமலோ அழித்து விடவோ அல்லது பார்த்து விடவோ வாய்ப்புண்டு. விண்டோஸில் Hide வசதியை பயன்படுத்தினாலும் அதையும் எளிதாக பார்த்து விடலாம்.

Password Folder என்னும் மென்பொருள் உங்கள் பர்சனல் போல்டர்களுக்கு Password வைத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பர்சனல் போல்டர்களை பிறரிடமிருந்து பாதுகாக்கலாம். இந்த மென்பொருள் எப்படி செயல் படுகிறது என பார்ப்போம்.

மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழே உள்ள விண்டோ தோன்றும்,இதன் மூலம் உங்கள் Password ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.



பின்னர் தோன்றும் விண்டோவில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய போல்டர்களையும் , கோப்புகளையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


கீழே உள்ள Lock & Exit என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த போல்டர்களும் , கோப்புகளும் நீங்கள் கொடுத்த Password மூலம் பாதுகாக்கபடும்.

போல்டர்களை மறைத்தல்(Hide),படிக்க முடியாமல் செய்தல்(Deny Read),எந்த மாற்றங்கள் செய்ய முடியாமல் தடுத்தல்(Deny Write) போன்ற மூன்று வழிகள் மூலம் உங்கள் போல்டர்களை பாதுகாக்கலாம்.



நீங்கள் பாதுகாக்கும் போல்டரை யாராவது பார்க்க நினைத்தால் கீழே உள்ளது போல் பிழைசெய்தி வரும்.



நீங்கள் மீண்டும் பாதுகாத்த போல்டரை பார்க்க நினைத்தால் மென்பொருளை திறந்து போல்டரை தேர்வு செய்து Unlock என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி Password Folder


http://browseall.blogspot.com

No comments:

Post a Comment