விசுவல் பேசிக் ஒரு அருமையான நிரலாக்க மொழி. எளிதான முறையில் பலவித சாப்ட்வேர்களை இதில் உருவாக்கலாம். நிரலாளர்களின் விருப்பமாக இருக்கும் இதில் அவ்வளவாக அசத்தலான தோற்றத்தை உருவாக்க கண்ட்ரோல்கள் இல்லை.இப்போது vb.net வந்ததும் சிலர் அதற்கு மாறிவிட்டார்கள்.
ஆனால் விசுவல் பேசிக்கிலேயே ஒருசில கண்ட்ரோல்களை இணைப்பதன் மூலம் நாம் உருவாக்கும் சாப்ட்வேரை மேலும் பயனுள்ளதாகவும் அழகாகவும் மாற்றலாம். இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு Grid கட்டுப்பாடு ஆகும். இது ஒரு ActiveX கண்ட்ரோல். இது ஏற்கனவே விபியில் உள்ள MsFlexgrid மற்றும் Listview இரண்டும் சேர்ந்த கலவை போல காட்சியளிக்கும். இதில் நாம் காட்சிக்கு வைக்கப்படும் தரவுகள் அழகாக வரிசைப்படுத்தப்படும்.
இந்த LGrid.ocx கோப்பை முதலில் தரவிறக்கவும்.பின்னர் நீங்கள் உங்களுக்கு வேண்டிய புரோஜக்டை திறந்து Project - > Component செல்லவும். திறக்கும் பெட்டியில் Browse செய்து நீங்கள் தரவிறக்கிய கோப்பை தேர்வு செய்து பின் அதில் டிக் செய்யவும்.இப்போது இந்த புதிய கண்ட்ரோல் உங்கள் புரோஜக்டில் இணைக்கப்படும்.
இதற்கான பின்புற வண்ணம், தேர்வு செய்யும் வண்ணம், ஒரு வரிசைக்கான உயரம் போன்றவற்றை நிரலாக கொடுத்துள்ளேன். இந்த கண்ட்ரோலை ஒரு படிவத்தில் இணைத்து வடிவமைக்கும் நேரத்தில் கூட இந்த அமைப்புகளை செய்யலாம். இல்லாவிட்டால் கீழுள்ள கோடிங்கை படிவத்தின் Load நிகழ்வில் அழைத்து இயக்க நேரத்தில் வண்ணம் போன்ற கூறுகளை மாற்றிக்கொள்ளலாம்.
Private Sub Form_Load()
Call setDesign
End sub
Private Sub setDesign()
With LGrid1
.AllowUserResizing = 4
.BackColor = &H80000005
.BackColorBkg = &HF4FFFF
.BackColorEdit = &HC0FFFF
.BackColorFixed = &H8000000F
.BackColorSel = &H80C0FF
.FocusRectColor = &H80FF&
.GridColor = &HA9EEFF
.SBackColor1 = &HF4FFFF
.SBackColor2 = &HE3F9FB
.Striped = True
.RowHeightMin = 20
End With
End Sub
அடுத்து ஒரு தரவுத்தளத்தில் (Database) உள்ள ஒரு குறிப்பிட்ட அட்டவணையின் தகவல்களை எப்படி இந்த கண்ட்ரோலில் வரிசைப்படுத்துவது என்று பார்ப்போம். கீழ் உள்ள கோடிங்கை உங்கள் தரவுத்தளத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டு எதாவது ஒரு கட்டுப்பாட்டின் கிளிக் நிகழ்வில் இந்த நிரலை சேர்த்துவிடவும்.
Private sub cmdShow_Click()
Dim I as long
Dim rs as New Adodb.Recordset
Rs.open “Select *from students”, Con, adOpenDynamic, adLockOptimistic
With LGrid1
.Redraw = False
.AddColumn "Name", 100
.AddColumn "Age", 200
.AddColumn "Class", 100
.Redraw = True
.Refresh
End with
LGrid1.Redraw = False
LGrid1.Clear
If Rs.Recordcount> 0 then
Rs.MoveFirst
Do while not Rs.EOF
I = LGrid1.AddItem(rs.Fields("Name"))
LGrid1.CellText(I, 1) = rs.Fields("Age")
LGrid1.CellText(I,2) = rs.Fields(“Class”)
Rs.MoveNext
Loop
End if
LGrid1.Redraw = True
LGrid1.Refresh
Rs.close
Set Rs = Nothing
End Sub
இதில் AddColumn என்ற பண்பு நெடுவரிசைத்தலைப்புகளை ( Column Header) அமைக்கிறது.அதோடு அதன் அளவையும் அருகில் கொடுத்துவிடலாம். CellText(I,1) என்பது குறிப்பிட்ட வரிசை மற்றும் நெடுவரிசையில் எந்த தகவல் அமையவேண்டும் என குறிக்கிறது.
எல்லாவற்றையும் முடித்துவிட்டு F5 கொடுத்து இயக்குங்கள். இப்போது Grid கண்ட்ரோல் முதல் வரிசை ஒரு வண்ணத்திலும் அடுத்த வரிசை வேறு வண்ணத்திலும் தொடர்ச்சியாக மாறி மாறி வரும். தேர்வு செய்யும் போது மற்றொரு வண்ணத்தில் தகவல்களை அழகாக காட்டும். நன்றி!
Tags : Linux Grid Control in vb6, vb6, ActivexControl, ocx files,ocx, Linux grid ocx , vb6 components, vb6 reference, Add an Activexcontrol in vb6, using Activexcontrols in vb6, Activex control programming in vb6, vb6 in tamil, tamil vb6
No comments:
Post a Comment