Nov 24, 2010

15 நிமிடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இ மெயில் ஐ.டி


தலைப்பை பார்த்ததும் இது என்னடா 'கஜினி' சூர்யா மாதிரி ஒரு இ மெயில் ஐ.டி யா என்றுதான் தோணுது இல்லையா ஆமாங்க ஆனால், உண்மைங்க இந்த இ மெயில் ஐ.டி 15 நிமிடம் மட்டும் தான் பயன்பாட்டில் இருக்கும் அதன் பிறகு தானே அழிந்து விடும் தன்மை கொண்டது. புதிய இணையத்தளங்களில் உறுப்பினராகும் போது, நாம் அளிக்கும் இ மெயில் முகவரியை ஸ்பாமர்கள் திருடி தேவையற்ற இ மெயில்களை அனுப்பி வைப்பார்கள். இதனை தவிர்க்க பொய்யான இ மெயில் முகவரியை அளித்தால், நம் இ மெயிலுக்கு அனுப்பப்படும் உறுப்பினராக உறுதி செய்வதற்கான இ மெயிலை பெற முடியாது. இத்தகைய சிக்கல்களுக்கு விடை சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்த 15 நிமிட இ மெயில் முகவரி.
ஆம், 15 நிமிடத்துக்கு மட்டுமே ஒரு புதிய இ மெயில் முகவரி அளித்து நாம் விருப்பப்படும் இணையத்தளத்தில் உறுப்பினரானவுடன் தானாக அழிந்து போகும் விதத்தில் அமைந்துள்ளது
இதற்கு நாம் http://www.guerrillamail.com/ என்ற இந்த இணையத்தளத்திற்கு சென்று இலவசமாக உறுப்பினராகி இ மெயில் முகவரியை பெறலாம். ஆனால் நமது வேலையை 15 நிமிடத்தில் முடித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை 15 நிமிடத்தில் நமது வேலை முடியவில்லை என்றால் மீண்டும் ஒரு 15  நிமிடம் இ மெயிலின் ஆயுட்காலத்தை நீட்டிக்க செய்யலாம். ஆனால் அதற்குள் நமது வேலையை முடித்து கொள்ள வேண்டும் இல்லையேல் நமது முகவரி தானே அழிந்து போகும் வேலையும் தடைப்படும் . எனவே இந்த குறுகிய நேரத்தில் நமது வேலையை முடித்து கொண்டால் இ மெயில் அழிந்து போனாலும் பரவாயில்லை இல்லையா .
இப்போ ஸ்பாமர்களிடம் நமது இ மெயில் முகவரி மாட்டும் என்று கவலை பட வேண்டியது  இல்லை . அவர்களும் ஏமாந்து போவார்கள் இல்லையா இது ஒரு வகையில் இணையத்தளத்தின் பெயரை போன்று ஸ்பாமர்கள் மீது கொரில்லா தாக்குதல் தான் இல்லையா. சரி சரி கிளம்புங்க கொரில்லா தாக்குதலை தொடுப்போம்.

No comments:

Post a Comment